Wednesday, July 21, 2010

விண்டோஸ் Dreamscene - வீடியோ வால்பேப்பர்

விண்டோஸ் இயங்குதளத்தில் டெஸ்க்டாப் வால் பேப்பராக புகைப்படங்களை வைத்து போரடித்துப் போனவர்களுக்கு, புகைப்படங்களை விட வால் பேப்பர் ஆக உங்களிடமுள்ள  அபிமான வீடியோவை  மாற்ற விண்டோஸ் விஸ்டா அல்டிமேட் இயங்குதளத்திற்கு  Dreamscene என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதே வசதியை VLC மீடியா பிளேயரைக் கொண்டு எப்படி உருவாக்குவது என்பதை ஏற்கனவே ஒரு இடுகையில் பார்த்தோம். விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இந்த வசதி தரப்படவில்லை.  எனினும் இந்த வசதியை விண்டோஸ் 7 -ல் எப்படி உருவாக்குவது என்பதை இறுதியில் பார்க்கலாம். 
முதலில் Dreamscene வசதியை விண்டோஸ் விஸ்டாவில் (அல்டிமேட்) எப்படி நிறுவுவது என்று பார்க்கலாம். 

Start மெனுவில் All Programs சென்று Windows update ஐ க்ளிக் செய்யுங்கள். அங்கு View available Extras என்பதை க்ளிக் செய்து, லிஸ்டில் Windows DreamScene இல்லையெனில் Check for updates லிங்கை க்ளிக் செய்யுங்கள். இனி பட்டியலில் வரும் Windows DreamScene க்கு நேராக உள்ள செக் பாக்சை க்ளிக் செய்து Install க்ளிக் செய்யுங்கள். இனி இந்த கருவி தரவிறக்கப் பட்டு உங்கள் கணினியில் பதியப்படும். ஒரு முறை கணினி ரீஸ்டார்ட் ஆகி வந்த பிறகு இந்த வசதி உங்கள் கணினியில் activate செய்யப்படும். இதனூடே ஒரு தரமான வீடியோ கிளிப்பும் உங்களுக்கு வால் பேப்பராக மாற்ற கிடைக்கும்.
மேலும் ஹை குவாலிடி வீடியோக்களைப் பெற, மேலே சொன்ன வழிகளை பின்பற்றி check for updates பட்டியலில் Windows DreamScene Content Pack ஐ தேர்வு செய்து install க்ளிக் செய்தால் போதுமானது. 

சரி. இந்த வசதியை விண்டோஸ் 7 இயங்குதளத்தில் உருவாக்க என்ன வழி இருக்கிறது என்று பார்த்தால், இதற்காக  பிரத்யேகமாக Windows 7 DreamScene Activator எனும் இலவச கருவி அமைந்துள்ளது. (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது) 


இதனை தரவிறக்கிய பின்னர் இதன் மீது வலது க்ளிக் செய்து context மெனுவில் Run as administrator ஐ க்ளிக் செய்து பதிந்து கொள்ளுங்கள்.  இங்கு Enable DreamScene என்ற பொத்தானை அழுத்தி activate செய்து கொள்ளுங்கள். 


 Windows Explorer ஒரு முறை ரீ ஸ்டார்ட் ஆகி வந்த பிறகு, தேவையான வீடியோவின் மீது வலது க்ளிக் செய்து, Set as Desktop Background ஐ க்ளிக் செய்தால் போதுமானது. 

 
அவ்வளவுதான்! இனி உங்கள் அபிமான வீடியோக்களை உங்கள் டெஸ்க்டாப் சுவர்தாளாக மாற்றி மகிழுங்கள். வீடியோவை  pause செய்ய டெஸ்க் டாப்பில் வலது க்ளிக் செய்து  Pause DreamScene க்ளிக் செய்யலாம்.



.

16 comments:

Thamizhan said...

suryakannan, read this post about you if you have a time.

http://sethiyathope.blogspot.com/2010/07/21072010.html

Suryakannan said...

மிக்க நன்றி நண்பரே! உங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவோடு மறுபடியும் புதிய அத்தியாயத்தை துவக்கியுள்ளேன்.. இந்த புதிய வலைப்பூவை எனது ஜிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட அன்றே (17-07-2010) துவங்கிய பொழுது எனது அலெக்சா ரேங்க் 62,00,000 ஆக இருந்தது இன்று இந்த மூன்றே நாட்களில் 31,00,000 ஆக வந்துள்ளது, உங்களைப் போன்ற நண்பர்களால்தான்.

என்னால் மறக்க முடியாத, நான் கேட்காமலேயே நண்பர்கள் செய்த இந்த உதவிக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்..

அன்புடன்
சூர்யா கண்ணன்

எசாலத்தான் said...

நண்பர் சூர்யா! "யாமிருக்க பயமேன்"

Suryakannan said...

// எசாலத்தான் said...

நண்பர் சூர்யா! "யாமிருக்க பயமேன்"//

மிக்க நன்றி நண்பரே!..

Saravanan said...

மீண்டு(ம்) வந்ததிற்கு வாழ்த்துக்கள்.

Suryakannan said...

//Saravanan said...

மீண்டு(ம்) வந்ததிற்கு வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றி திரு. சரவணன்

MANIKANDAN said...

அருமையான தகவல் ,

உங்களுடைய பனி தொடர்க

Thomas Ruban said...

தகவலுக்கு நன்றி சார்.

உங்களால் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கூடிய விரைவில் பழைய அலெக்சா ரேங்க் அடைய வாழ்த்துக்கள்.

சூர்யா கண்ணன் said...

// MANIKANDAN said...

அருமையான தகவல் ,

உங்களுடைய பனி தொடர்க//

நன்றி மணிகண்டன்

சூர்யா கண்ணன் said...

// Thomas Ruban said...

தகவலுக்கு நன்றி சார்.

உங்களால் எல்லோருக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

கூடிய விரைவில் பழைய அலெக்சா ரேங்க் அடைய வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க தாமஸ் ரூபன்!

சே.குமார் said...

நண்பரே...

சோதனைகளைத் தாண்டி திரும்பி வந்ததற்காக வாழ்த்துக்கள்...
எனது Gmail பக்கததில் signature-ல் நான் போட்டு வைத்திருக்கும் வாசகம்தான் கீழே இருப்பது...

நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும்
நடப்பவை நல்லதாக அமையட்டும்.

ஆம், நண்பரே.... நடப்பவை நல்லதாகட்டும்.

abul bazar/அபுல் பசர் said...

பயனுள்ள பகிர்வு.
நன்றி சூர்யா கண்ணன்.

basheer said...

மிக விரைவாக மீண்டு வந்ததற்கும்,புதிய வலைப்பூவிற்கும் வாழ்த்துக்கள். கணினி தொடர்பான அறிவு எனக்கு மிக குறைவு.உங்களால் முடிந்தால் எனக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.
acer laptop model 5620 உபயோகப்படுத்தி வருகிறேன்.நேற்று முதல் பிரச்னை.login செய்வதற்கே right click மூலமே முடிகிறது.desktop open ஆகி freeze நிலையில் இருக்கிறது.cursor நகர்கிறது.ஆனால் க்ளிக் செய்ய முடிவதில்லை.
safe மோடிலும் இதே நிலைதான்.(மன்னிக்கவும்.எனது os windows vista home basic) வேறு எந்த os உம் இன்ஸ்டால் செய்திருக்கவில்லை.இதை சரி செய்ய வழி ஏதும் இருந்தால் தயவு செய்து உதவுங்கள்.
எனது மின்னஞ்சல் முகவரி omegabasheer@hotmail.com நன்றி.(நான் பதிவர் அல்ல வெறும் வாசகன் மட்டுமே.தற்சமயம் சிங்கையில் இருக்கிறேன்.)

Aathavan said...

மீண்டு... வந்ததிற்கு வாழ்த்துக்கள்./////

Mike S Blueberry said...

I have installed Windows Dreamscene but when i select a video file and say "set as Desktop Background" i getting the below error - Windows Dreamscene can only run when windows Aero scheme is selected. how to solve this problem?

Tech Shankar said...

thanks dear buddy