நமது வலைப்பூவிற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் எத்தனைபேர் வருகை தந்துள்ளார்கள், உலகின் எந்தெந்த பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ளார்கள், நமது தளத்தில் எந்த பக்கத்தை எவ்வளவு நேரம் பார்வையிட்டிருக்கிறார்கள், எந்த தேடுபொறியின் வழியாக வந்திருக்கிறார்கள், அல்லது எந்த வலைப்பக்கத்திலிருந்து வந்திருக்கிறார்கள், எந்த உலாவியில் நமது வலைப்பூவை திறந்திருக்கிறார்கள், எந்தெந்த குறிச்சொற்களை உபயோகித்து வந்திருக்கிறார்கள் போன்ற பல வகையான பயனுள்ள விவரங்களை ஒரு வலைப்பூவின், வலைத்தளத்தின் உரிமையாளருக்கு வழங்குவது இந்த கூகிள் அனலிடிக்ஸ் வசதி என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இந்த வசதியை பயன்படுத்தி நாம் நமது தளத்தை மேலும் பலரை சென்றடைய என்னென்ன செய்யவேண்டும் என்பதை முடிவு செய்ய இயலும். என்பது இங்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை.
சரி இப்பொழுது தலைப்பிற்கு வருவோம். இந்த வசதியை பயன்படுத்த நாம் கூகிள் அனலிடிக்ஸ் -இல் ஒரு கணக்கை உருவாக்கும் பொழுது நமது வலைப்பூவில் இணைப்பதற்காக நமக்கு தரப்படும் HTML code ஐ நாம் காப்பி செய்து இணைத்திருப்போம். பிறகு சில நாட்களுக்குப் பிறகு நமது வலைப்பூவின் template ஐ மாற்றி விடலாமே என்ற எண்ணத்தில் template ஐ மாறிவிட்ட பிறகு, மறுபடியும் இந்த கூகிள் அனலிடிக்ஸ் code ஐ இணைக்க வேண்டுமே என்ற யோசனை வரும்பொழுதுதான் நமக்கு நினைவிற்கு வரும், நாம் அந்த code ஐ வேறு எங்கும் சேமித்து வைக்கவில்லை என்பது.
சரி, கூகிள் அனலிடிக்ஸ் தளத்திற்கு சென்று எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தபிறகு, தளத்தில் எளிதாக இந்த code ஐ தேடி எடுக்கும்படியாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாகவே பலரும் தாங்கள் உருவாக்கிய கூகிள் அனலிடிக்ஸ் கணக்கை மறுபடியும் பயன்படுத்துவதை நிறுத்தி விடுகிறார்கள்.
இதை எளிய வழிமுறையில் எப்படி கண்டறிவது என்பதை பார்க்கலாம். முதலில் உங்கள் கூகிள் அனலிடிக்ஸ் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். உங்கள் வலைப்பக்க முகவரிக்கு நேராக உள்ள edit லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து திறக்கும் திரையில் Main Website Profile Information டேபிற்கு வலது மேல் மூலையிலுள்ள Check Status லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவுதான்...
அடுத்த திரையில் நீங்கள் தேடிக்கொண்டிருந்த Google Analytics Tracking Code. காப்பி செய்து உங்கள் வலைப்பூவில் இணைத்து பயன்பெறுங்கள்.
'கூகிள் அனலிடிக்ஸ் வசதி எனக்கு எதற்கு?' என யோசிப்பவர்களும் ஒட்டு போடலாம்.
.





6 comments:
சூப்பர் தலைவா..
நன்றி தலைவா!
அருமையன் பதிவு வாழ்த்துக்கள்
thalaivaa. ippo dashboardlaye stats nu puthusa oru button irukku. moththa alasalum kidaikkuthu:)
நன்றி திலிப்
நன்றி தலைவா!
Post a Comment