Monday, July 19, 2010

வைச்சுட்டாங்கைய்யா ஆப்பு!

வணக்கம்!

நான் கடந்த 17-07-2010 சனிக்கிழமை காலை எனது கணினியை திறக்கும் பொழுது எனக்கு ஓர் பேரதிர்ச்சி காத்திருந்தது. முதலில் Firefox திறந்த பொழுது, Homepage ஆன எனது ப்ளாக் http://suryakannan.blogspot.com -ல் No Posts என காண்பித்தது. 


அடுத்த டேபில் ஜிமெயில் (suryakannan@gmail.com) கணக்கில் நுழைய முயன்றபொழுது The username or password you entered is incorrect. என்று வந்தது. அப்பொழுது சரியாக பதிவர் நண்பர் வேலன் அவர்களின் தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்க ப்ளாக் என்னாச்சு?' என அவர் கேட்டிருந்தபொழுது, 'நானும் இப்போதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்' என்று பதிலளித்த போதும், எனக்கு அந்து பிரச்சனையின் தீவிரம் பிடிபட்டிருக்கவில்லை. 

எவ்வளவோ முயன்றும் ஜிமெயில் கணக்கில் நுழைய முடியவில்லை. சரி ஏதாவது cookies பிரச்சனியாக இருக்கலாம் என்று History clear செய்து விட்டு, CCleaner ஐயும் ஓடவிட்டு முயற்சித்துப் பார்த்தும் எந்த பயனும் இல்லை. அடுத்து எனது யாஹூ  (suryakannan@yahoo.com) கணக்கில் நுழைய முயன்றபொழுதும், The username or password you entered is incorrect. அதே பிரச்சனை தான். கொஞ்சம் பதட்டம் உருவாக ஆரம்பித்தது. 

பதிவர் நண்பர் ஷிர்டி சாய்தாசன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். விவரத்தை சொன்னேன். அவரும் அவரது கணினியில் முயன்று பார்த்து, ப்ளாக் பிரச்சனையும், கூடுதலாக 'உங்க ஈமெயில் முகவரிக்கு நான் ஈமெயில் செய்தால், email id not exists.. ன்னு   வருது' என்று சொன்னவுடன், பதட்டம் மேலும் அதிகரித்தது. மேலும் அவர் 'பதட்ட படாதிங்க.. நிதானமா உங்க வாசகருக்கு இந்த பிரச்சனை வந்தது போல கருதி இதற்கான தீர்வை கண்டறியுங்கள்..' என்றார்.
கணினி அறையை விட்டு வெளிவந்து ஒரு சிகரெட் பிடித்தேன். ஒரு கோப்பை தேநீரும் கூட.  மறுபடியும் கணினி முன்னால் அமர்ந்து, Rediff mail திறக்க முயன்றபொழுதும், அதற்கடுத்து, Facebook, Orkut, Twitter, Blogger எந்த கணக்கிலும் நுழைய முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்ந்து முடிந்த விபரீதம் எனது முகத்தை அறைந்தது.
யாருக்காவது மின்னஞ்சல் செய்து ஆறுதல் பெறலாம் என யோசித்தபொழுது, யாருக்கு, எப்படி? அனைத்து முகவரிகளும், எனது ஜிமெயில் Contact list -இல் அல்லவா உள்ளது என்று உணர்ந்ததும், BP எகிறியது. பதிவுலகில் பாலா சார் முகவரி மட்டும் லேசாக நினைவில் இருந்தது போலிருந்தது, பிறகு நான் தோராயமாகத்தான் அவருக்கு நிலையை குறித்து மின்னஞ்சல் செய்தேன்.  அவரிடமிருந்து தொடர்ந்து வந்த பதில்களில் கொஞ்சம் பதட்டம் குறைந்து,  நிதானமாகியிருந்தேன்.  

ஜிமெயில் recovery வசதிகள் அனைத்துமே முயன்றாகிவிட்டது. ஜிமெயிலில்  Recovery/Alternate Email Id யாக எனது யாஹூ id ஐத்தான் கொடுத்திருந்தேன். யாஹூ கணக்கும் முடக்கப்பட்டு விட்டபிறகு அந்த வழியும் அடைபட்டு போனது. யாஹூ Recovery யும் தோல்விதான்.  

இந்த முடக்கப்பட்ட கணக்குகள் அனைத்திற்கும் உள்ள ஒற்றுமை, அதன் பயனர் பெயர் suryakannan என்பதும், மற்றபடி Twitter போன்றவை ஜிமெயில் கணக்கை உபயோகித்து உருவாக்கியிருந்ததால், அதையும் இழக்கவேண்டியிருந்தது என்பதை உணர முடிந்தது. சரி! இதெல்லாம் போய்விட்டது, அடுத்து வேறென்ன தீர்வு என யோசித்ததில், முதலில் மனதில் தோன்றியது ப்ளாக்? அது போனால் போகட்டும், (மொத்தம் 249 இடுகைகள், 419 followers, 2 ,81 ,000 க்கும் அதிகமான ஹிட்ஸ், குறிப்பாக அலெக்சா ரேங்க் கடந்த மூன்று மாத கணக்கில் 1,12,967 இந்த மாதத்தில் 92237 , அதாவது எனது எதிர்பார்ப்பான  ஒரு லட்சத்தை அடைந்து விட்டேன். )    சரி போனால் போகட்டும், புதியதாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து விடலாம். ஏற்கனவே எடுத்து வைத்திருந்த பேக் அப்  இடுகைகள் 244 இருந்தது, இவற்றைக் கொண்டு தற்பொழுது http://sooryakannan.blogspot.com என்ற இந்த வலைப்பூவை ஆரம்பித்துளேன். (உங்களது மேலான ஆதரவை நம்பி

இந்த சம்பவம் குறித்து பாலா சார் தனது இடுகையில் தெளிவாக கூறியிருந்தார். அவருக்கும், எனது ஆறுதல் அளித்த நண்பர்கள், ஆலோசனை கூறி ஊக்கப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி! 

நான் இழந்தது குறிப்பாக எனது வியாபர சம்பந்தப்பட்ட contacts , முக்கிய மின்னஞ்சல்கள். மற்ற பதிவுலக நண்பர்களுக்கு நிகழ்ந்தது போல எனக்கு எனது ப்ளாக் மட்டும் போகவில்லை.
நான் எனது மின்னஞ்சல் கணக்கில், பண பரிவர்த்தனை எதுவும் செய்வது கிடையாது. நான் பெரிய வியாபார காந்தமும் கிடையாது, பிறகு எந்த காரணத்தைக் கொண்டு எனது இந்த கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன. இதை ஹேக் செய்தவர்களின் நோக்கம் என்ன? இதனால் அவர்கள் அடையும் பயன் என்ன? பணமோ, வியாபாரமோ இதற்கு காரணமல்ல. எனது ப்ளாக் இன் பாப்புலாரிட்டியை அழிப்பதுதான் இவர்களது நோக்கமாக இருக்க முடியுமென்று தோன்றுகிறது. இந்த பாப்புலாரிட்டியை வைத்துக் கொண்டு நான் என்ன பெரிதாய் சாதித்து விட முடியும்? பத்து பைசாவிற்கு பிரயோஜனம் கிடையாது.

இழந்தவற்றை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. பார்ர்க்கலாம். மேலும் இந்த நிகழ்வு எப்படி நடந்திருக்க முடியும், தீர்வு (கிடைத்தால்!) என்ன என்பதைப் பற்றி மற்றொரு இடுகையில் பார்க்கலாம். 

இந்த எனது புதிய வலைப்பூவிற்கு உங்கள் ஆதரவை அளித்து உதவுமாறு வேண்டி விடைபெறுகிறேன். 

எனது புதிய மின்னஞ்சல் முகவரி makcoonoor@gmail.com இது தொடர்பு கொள்ள உங்களுக்கும், இல்லாதொழிக்க ஹேக்கர்களுக்கும்.  

நன்றி
அன்புடன் 
சூர்யா கண்ணன்          



70 comments:

Tech Shankar said...

I feel so sad after reading this. You will get your net assets soon.

Mrs.Menagasathia said...

மிகவும் கவலையாக இருக்கு...கவலைபடாதீங்க..இழந்தவற்றை திருமப் பெறுவீர்கள்..

sethupathy said...

தொடர்புக்கென ஒரு முகவரியும்.. வலைபூவுக்கென ரகசியமாக ஒரு முகவரியும் வைத்துக்கொள்ளலாம்...

சௌந்தர் said...
This comment has been removed by the author.
Venu said...

ரொம்ப அதிர்ச்சி
மிகவும் கவலையாக இருக்கு.
உங்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட விஷயம்
மிக அதிகம். உங்களுக்கே இந்த நிலமயா? கடவுளே....
இரண்டு நாட்களாக நானும் உங்கள் வலைபூக்கள் திறக்கமுடியவில்லை என வருத்தம்.

சௌந்தர் said...

நான் காலை இந்த செய்தி படித்த உடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது உங்களிடம் இருந்து பல விஷயம் கற்ற கொண்டோம்.
உங்களுக்கு இந்த நிலைமை என்று நான் ரொம்ப அதிர்ச்சி அடைந்தேன் இதனால் இவர்கள் என்ன லாபம் என்று தெரியவில்லை

தனுசுராசி said...

வடை போச்சே... ( வருத்ததுடன்...)

பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவீர் என்ற நம்பிக்கை உள்ளது...

றமேஸ்-Ramesh said...

மிகவும் கவலையடைந்தேன் எப்படியோ மீண்டு வருக. கண்டுபிடிக்க இதுதான்சந்தர்ப்பம். எப்போதும் உங்களுடன்

mraja1961 said...

மிகவும் வருந்துகிறேன். திருநெல்வேலிக்கே அல்வாவா? மனம் தளரவேண்டாம் உங்களால் பயனடைந்தவர்கள் நாங்கள் இருக்கிறோம்.

மஹாராஜா

Geetha6 said...

don't worry Soorya..
God is there ..He will
take care.Don't get tensed.
ok..Coool ..

சசிகுமார் said...

நண்பரே மிகுந்த வருத்தம் நண்பா, விரும்பினால் உங்கள் பழைய Gmail id password கொடுங்கள் நானும் முயற்சி செய்து பார்க்கிறேன். ஆழ்ந்த இரங்கலுடன்.

My email - yamsasi2003@gmail.com

வெறும்பய said...

மனம் தளரவேண்டாம் உங்களால் பயனடைந்தவர்கள் நாங்கள் இருக்கிறோம்....

malgudi said...

உங்களுக்கு நடந்தது மிகவும் வேதனையைத் தந்தது.ஏனெனில் உங்களை என் கணணி ஆசானைப் போலவே நான் கருதினேன்.
அதனால் என் குமுறலை உடனே பதிவிட்டேன்.(mugamoody.blogspot.com)

உங்கள் திறமைக்கு இது ஒரு சவால்.நிச்சயம் தாண்டிவருவீர்கள்.

manjoorraja said...

வருந்துகிறேன். கூகில் உதவி மூலம் முயற்சிக்கவும். நிச்சயம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

பிரவின்குமார் said...

மிகவும் அதிர்ச்சியடைக்கூடிய வருத்தத்திற்குரிய செய்தி நண்பரே..! உங்கள் வலைப்பக்கத்தை படித்தே கணினியில் பல தகவல்களை பெற்ற என்னைப்போன்ற நிறைய வாசகர்களுக்கும் இது பேரிழப்பு..! நிச்சயம் மீண்டும் பழைய வலைப்பக்கம் கிடைக்குமென நம்பிக்கை இருந்தாலும், புதிய தளத்தில் அதைவிட பெரிய டிராப்பிக்கை நீங்க ஏற்படுத்துவீங்கனு அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது..! கவலையை விடுங்க நண்பரே..!

arulmozhi r said...

உங்கள் பிளாக் ஹேக் செய்யப்பட்டது பற்றி எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. இழந்தவற்றை திரும்ப பெறுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

வானம்பாடிகள் said...

Dont worry sir. :). you will come back.

ஜில்தண்ணி - யோகேஷ் said...

ரொம்ப கேவலமான செயல் இந்த திருட்டு

கண்டிப்பாக மீண்டும் கிடைக்கும் என அனைவரும் நம்புவோம்

சேட்டைக்காரன் said...

உங்களுக்கு ஏற்பட்ட இந்த இடையூறும், அதனால் உண்டாகியிருக்கக் கூடிய மன உளைச்சலும் மிகவும் வருந்தத்தக்கது. உங்களது முந்தையை வலைப்பதிவே முடங்கி புதியதோர் பக்கத்தைத் துவங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு புதிய துவக்கமாக, முன்னை விட பெரிய வெற்றிகளுக்கு அடிகோலாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துவதோடு, உங்களது மன உறுதியைப் பாராட்டுகிறேன்.

எனக்கும் இதே நிலைமை, அதே சனியன்று ஏற்பட்டது. :-(( மதிய உணவுக்குச் செல்லும் வரையிலும் இயங்கிக் கொண்டிருந்த எனது ஜீ-மெயில் கணக்கை என்னால் பயன்படுத்தவே இயலவில்லை. யாஹூ கணக்கின் உதவி கொண்டு மூன்று முதல் நான்கு மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, ஒரு வழியாக, தெய்வாதீனமாக எனது கணக்கை மீட்டேன்.

சிறிது நாட்களாக எழுதாமலிருந்த நான், அன்றே ஒரு பதிவும் எழுதிவிட்டேன். நம்மை வெல்ல நினைப்பவர்களைத் தோற்கடிப்போம்.

அமைதி அப்பா said...

கவலை கொள்ள வேண்டிய விஷயம்.

suthanthira.co.cc said...

google will help. try again

vino said...

நான் பதிவிடத் தொடங்கி ஒரு மாதம் கூட ஆகவில்லை. என்னைத் தமிழில் தொழில்-நுட்பப் பதிவிட உந்துதலாக இருந்த பதிவர்களுள் தாங்களும் ஒருவர். இதற்காக வருந்துகிறோம். மேலும், உங்களது வலைப்பூ மீண்டும் கிடைக்கும் எனறு நம்புகிறோம்.

-வினோ =(

Sai Gokula Krishna said...

Dear Surya,
We share your feelings..,
Thomas Alva Edison wrote notes in lot of books about his Inventries. Oneday all are burned incl his house. He didn't loose his confident and attemts and became a best Scientist and invented a lot.
One door closed the another one opens..,

Feros said...

நான் இந்த செய்தியை படித்த உடன் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது உங்களுக்கு இந்த நிலைமை என்று நான் ரொம்ப அதிர்ச்சி அடைந்தேன்.

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்,

நீங்கள் பல வருடங்கள்
சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்,,,
நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய் இருங்கள்...

உங்களிடம் இருந்து பல விஷயங்களை கற்று கொள்கிறார்கள், கற்றுக் கொள்கிறேன்...

புலவன் புலிகேசி said...

இழந்தவற்றை மீண்டும் பெறுவீர்கள்...

கலகலப்ரியா said...

sry... :( (tamilmanam add pannunga..)

கலகலப்ரியா said...

apdiye thuruthalum... puthusa podunga..

கக்கு - மாணிக்கம் said...

வலைப்பூவில் உங்கள் அளவுக்கு எனக்கு அனுபவம் இல்லை என்றாலும், ஒரு விஷயம் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகிறது
சூர்யா.
இங்கு தன்னையும், தன் படைப்புக்களையும் மட்டுமே முன்னிலை படுத்த ஒரு கொள்ளையர் கூட்டமே வேலைகளை செய்து கொண்டுள்ளது. யார் எதை எழுதினாலும் அவைகள் வெறும் பகிர்தலின் பொருட்டே அன்றி வேறு எந்த பயனும் இல்லை என்று தெரிந்திருந்தாலும் சில வக்கிர மனம் கொண்டவர்களுக்கு அடுத்தவர் பெருமை படுத்தப்படுவதை சகித்துக்கொள்ள முடியவில்லை.
அந்த மனோ வியாதிகாரர்களின் பொறாமையால் வந்துதான் இது.

அலெக்சா ரேங்க் கில் உங்களுக்கு அடுத்த நிலைகளில் உள்ளவர்களை ஆராயுங்கள். அங்குள்ள சிலரின் வேலையாகவே இது இருக்கக்கூடும். ஒரே விதமாக ஒற்றுமை இல்லாமல் வேறு வேறு id , pass word இவைகளை பயன்படுத்தலாம் .id மற்றும் pass word போன்றவைகளை நான் தனியாக ஒரு இடத்தில சேமித்து வைத்துகொள்வது வழக்கம்.

உங்களுக்கு உள்ள வாசகர் வட்டம் இங்கு வலைப்பூவில் வேறு ஒரு பயலுக்கும் இல்லை. Cheer!..... my dear friend.

கக்கு - மாணிக்கம் said...

Tech Shankar இருக்கிறார். அனைத்தும் கிடைத்துவிடும் சூர்யா. I hope so.

மதுரை சரவணன் said...

இப்படியும் நடக்குமா...?

Daynight said...

Sorry to hear that. This is what happen for one of my friend, best solution is contact/send email to google, they will recover it and may be they will find who hacked and where. Best of luck

ஜெய்லானி said...

தெரிந்தவருக்கே இந்த கதின்னா மத்தவங்களுக்கு சொல்லனுமா என்ன..!!


இதை படிக்கவே கஷ்டமா இருக்கு..

praveenchandran said...

Don't worry kannan you can do everything....we are waiting and wishing...

அஸ்பர் said...

dont worry. how can we protect our blog from this type of hackers. வாழ்த்துக்கள் நண்பனே. தொடர்ந்து எழுதவும்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் சூர்யா சார்.
கனணி பற்றியும் வலை பக்கம் குறித்தும் நிறைய விஷயங்கள் உங்களால் தான் அறிந்து கொண்டேன்.
உங்களிடம் கைவரிசை காட்டிய கயவர்கள் நல்லயிருக்கமாட்டார்கள்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கவலை வேண்டாம்.அவர்களால் சூர்யகண்ணனையும்,அவரது வாசகர்களையும் ஹேக் செய்ய முடியாது

Jey said...

உங்களுக்கு நடந்த நிகழ்வு கண்டு வேதனையாக உள்ளது. மீண்டு புதிய உத்வேகத்துடன் புதிய பிளக் ஆரம்பித்தது மகிழ்ச்சி. ஃபோளோயர்ஸ் பிரச்சினையில்லை மீண்டும் அனைவரும் சேர்ந்துவிடுவார்கள். உங்களின், மீடெடுக்க முடியாத பதிவுகளும், கான்டாக்ட்ஸும் தான் உண்மையான இழப்பு, அதுதான் வருத்தம் அளுக்கிறது. பல நேரங்களில், நம் மீது முகம் தெரியாதவர்கள், என், எதற்கா என்றே தெரியாமல் , இழப்புகளை ஏற்படுத்துகிறார்கள். உங்களின் பாப்புலாரிட்டியின் மேல் பொறாமைகொண்டவன் செய்த செய்கை எனில், அது அந்த ஈனபிறவிக்கு தோல்வியில்தான் முடியும்.

கே.ஆர்.பி.செந்தில் said...

ரொம்ப வேதனையா இருக்கு.. முட்டாள்தனமான மன வக்கிரம் கொண்ட ஆட்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்..

மீண்டு வர துணை நிற்ப்போம் சூர்யாக்கண்ணன்...

Rajasurian said...

மிகவும் வருத்தமாக இருக்கிறது.
புதிய வலைப்பூவை உடனடியாய் தொடங்கிய தங்கள் உறுதிக்கு என் வாழ்த்துக்கள்anda1234

சி.பி.செந்தில்குமார் said...

டோண்ட் ஒர்ரி,எதிர்ப்பு வர வரத் தான் நம்முள் உத்வேகம் பன்மடங்கு அதிகரிக்கும்

Saravanan said...

என்னதான் ஹேக்கர்கள் தடை போட்டாலும்
உங்கள் திறமைக்கு தடை போட முடியாது.

அது உங்கள் சொத்து அதை அழிக்க யாராலும் முடியாது.

எனவே தொடருங்கள் உங்கள் பயணத்தை, பிரார்த்திகிறோம் உங்களுக்காக.

jeevaflora said...

Write it to Google.Long back I did the same and got back from Google by a mail .Please try for this too.
Sorry to say for every thing.
Florajeeva

Raj Rajkumar said...

அதிர்ச்சி.. எனக்கு இடையிடயே தங்கள் பிளாக்கினுல் செல்லமுடியாமல் இருக்கும், தங்களிடம்கூட இதைத் தெரிவித்திருந்தேன்...இதுபோன்ற காரியம் செய்பவர்களை விடக்கூடாது. அவர்கள் வைத்த ஆப்பை எடுத்து அவர்களுக்கே சொறுக வேண்டும்...மீண்டும் சிறப்பாக வலம் வர எமது வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் !

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.கவலைபடாதீங்க..இழந்தவற்றை திருமப் பெறுவீர்கள்..

BOSS said...

dont worry friend

abul bazar/அபுல் பசர் said...

நண்பர் சூர்யா கண்ணன் அவர்களுக்கு
உங்கள் வலைப்பதிவை படித்து நான் அறிந்துகொண்ட விசயங்கள் நிறையவே. என்னை போன்றே சக பதிவர்களும்,வாசகர்களும்.
தொழில் நுட்பம் தெரிந்த உங்களைபோன்றவர்களுக்கே இந்த நிலைமை என்றால் எங்களைப் போன்ற கத்துக்குடிகளுக்கு என்ன நிலைமையோ.

மனதை தேற்றி கொண்டு மீண்டும் களத்தில் குதியுங்கள்.
எங்களைப் போன்றவர்களின் அன்பும்,ஆதரவும் உங்களுக்கு நிறையவே உண்டு.
நட்புடன்
அபுல்.

MinMini.com said...

முதலில் வருந்துகிறேன்...

அலெக்சா ராங்கில் 1 லட்சத்துக்குள் வந்த உங்களால்... உங்கள் சொந்த பெயரில் ஒரு டொமைனை பதிந்து வேர்ட் பிரஸ் முலம் ஒரு பக்கத்தை செய்ய முடியாதா?

www.suryakannan.com
www.sooryakannan.com

இநந்த இரண்டு முகவரியுமே இன்னமும் Free யாக தான் இருக்கிறது !

செலவு ஒரு பிரச்சனை என்றால்... நாம் நாம் ஒரு டொமைனை பொன்ஸர் பண்ண ரெடியாக இருக்கிறோம்.

வாழ்க தமிழ்!
www.minmini.com

pinkyrose said...

உண்மையில் மிக வருத்தமாக இருக்கு. சீக்கிரம் கண்டு பிடியுங்கள் யார் இந்த திருட்டை செய்தது என்று...

கைய வெட்டி எறியணும் அவங்களுக்கு

MANIKANDAN said...

ரொம்ப அதிர்ச்சி
மிகவும் கவலையாக இருக்கு.

dinesh said...

அன்பு நண்பருக்கு வணக்கம்,

இது நிச்சயாமாக உங்கள் பயனர் பெயர் தெரிந்த ஒருவரால் மட்டுமே நிகழ்த்தியிருக்க முடியும். இது எனக்கும் கவலையளிக்கக் கூடிய விஷயம் தான். எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ராமருக்கு அணில் உதவியது போல உங்களுடைய புதிய வலைபக்கத்திற்கு என்னுடைய தளத்தில் சுட்டியை இணைத்துள்ளேன். உங்களுக்கு எங்களுடைய அதரவு என்றும் உண்டு.

உங்கள் வாசகனாய்,
மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

தமிழார்வன் said...

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.

துன்பங்களை வெல்லக்கூடியது, அத்துன்பங்களை கண்டு தளராது இருக்கும் மனம் தான்.

உண்மையான உழைப்பு என்றுமே வீண் போகாது. திருடி அழித்தது உங்கள் எழுத்துகளை மட்டுமே. உங்கள் சிந்தனா சக்தியை அல்ல.

சூர்யா கண்ணன் என்ற பீனிக் பறவையை மீண்டும் புதுப்பொலிவோடு காண ஆவலோடு உள்ளோம்.

அன்புடன்
தமிழார்வன்.

C.Rajapandiyan said...

நீங்கள் மீண்டு(ம்) பிறப்பீர்கள் புதிய எழுச்சியுடன்...

ஜோதிஜி said...

ஆப்பு இல்ல மாப்பு. இது தான் உங்களுக்கு சரியான வாய்ப்பு.

இப்போது இரண்டு லட்சம் என்று மனதில் குறித்துக் கொள்ளுங்கள். சரியாக ஆறு மாதத்தில் உங்களைப் போன்றவர்கள் அதை அடைந்தே விட முடியும்.

முகம் தெரியாத அந்த நண்பருக்கு அப்போது ஒரு காணிக்கை இடுகை போட்டு விடுங்கள்.

வாழ்ந்து காட்டுவதை விட வேறு என்ன பெரிதான பழிவாங்கல் இருக்க முடியும் கண்ணன்?

kippoo said...

தளராமல் தொடருங்கள். உங்கள் இந்த பதிவை நான் லிங்க் கொடுக்கின்றன். (அனுமதியுடன்)

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வருத்தப்படாதீங்க சூர்யா. பதிவு திரும்பகிடைக்கும்.

manohar said...

பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவீர்

maanikam said...

enrum nangal ungaludan irukirom mendum thodarga thangal pani a.manickavelu

Great said...

Dont Worry Sir. We are always have with u..BE happy....

Great said...

Dont Worry Sir.you can do anything..if you cannot anybody cannot sir..common surya...

gulf-tamilan said...

:(((

mkrpost said...

நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.அதற்கான விலை பெரிய இழப்பாக இருக்கிறது.இழந்தவற்றை மிண்டும் பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருப்போம்

Mohan said...

மிகவும் வருத்தமாக உள்ளது. நீங்கள் மீண்டேழுவீர்கள்.... மனம் தளர வேண்டாம்!
வாழ்க வளமுடன்!

V.Muthu kumaran said...

Mr.Surya kannan sir God bless u dont worry you will get your net assets soon.

பொதிகை said...

பொன்மலர் அவர்களின் வலைப்பூ மூலம் தான் தங்களின் புதிய முகவரி கிடைத்தது. தங்களது முந்தைய வலைப்பதிவுகள் அழிக்கப்பட்ட விபரம் தெரிந்தவுடன் மிகுந்த மன வேதனை அடைந்தேன். வலைப்பூவினை திருடிவிட்டாலும் உங்கள் வாசகர்களான எங்களைத் திருட முடியாதே? தாங்கள் மீண்டும் வெற்றிநடை போடுவதை அந்தக் கயவர்கள் காணத்தான் போகிறார்கள்.

PAATTIVAITHIYAM said...

அன்புள்ள சுா்யா,
உங்கள் பதிவைக்காணாமல் தவித்து வி்ட்டேன். நடப்பது நன்மைக்கே. உங்களுக்கு ஒரு அனுபவத்தைக் கொடுக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை சமாளிப்பது எப்படி என்று ஆராய வைக்கிறது. தொடா்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வெங்கடேசு said...

இதுக்கெல்லாம் கவலைப்படாதீங்க சார்.
நாங்க இருக்கோம் .

karthikeyan said...

அன்புள்ள சூர்யா கண்ணன் அவர்களுக்கு என் அதிர்ச்சியான மன வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் ஏற்பட்ட நிலைமை எனக்கும் ஏற்பட்டால் நான் என்ன செய்வது. என்னுடைய ப்ளாக் ஒரு புதியது . இதுவரை உருபடிய எதுவும் எழுத வில்லை .
இருந்தும் என்னுடை ப்ளாக் கை பாதுகாக்க நான் என்ன செய்ய வேண்டும். மேலும் நானும் ஜிமெயில், ப்ளாக், மற்ற மெயில் அனைத்துக்கும் ஒரே கடவு சொல்லை தான் பயன்படுத்துகிறேன். இதனால் எதாவது பாதிப்பு வருமா? மேலும் என்னுடைய சொந்த கணினியில் உள்ள mozila firefox- இல் அணைத்து கடவு சொல்லையும் பதிவு செய்து உள்ளேன்.
இதை நான் எப்படி நீக்குவது?,ப்ளாக் மற்றும் மெயில் ஐ எப்படி bake up எடுப்பது ? ப்ளீஸ் எனக்கு சொல்லுங்கள்
அதிர்ச்சி விலகாமல் -கார்த்திகேயன்

ரவி said...

அன்பு நண்பருக்கு,
நான் தங்களின் வலைப்பூவின் பதிவுகளை நீண்ட காலமாக வாசித்து பயன் பெற்று வருபவர்களில் ஒருவன். எனக்கும் கணிணி துறைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் தங்களின் பதிவுகளின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டேன். நான் பொதுவாக பதிவுகளை வாசித்து பயன் பெறுவதோடு சரி அதிகமாக பின்னூட்டம் இட்டதில்லை (சுயநலத்திற்கு மன்னிக்கவும்) ஆனால் தங்களின் வலைப்பூவிற்கும், சொந்த மின்னஞ்சலுக்கும் நேர்ந்த இந்த எதிர்பாராத விஷயத்தை கேள்விப்பட நேர்ந்ததும் மனம் மிகவும் கவலையடைந்தது. ஆகவேதான் எனது மேலான ஆருதல்களை இந்த பின்னூட்டம் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

அன்போடும்... ஆதரவோடும்...
ரவி...

ரவி said...

அன்பு நண்பருக்கு,
நான் தங்களின் வலைப்பூவின் பதிவுகளை நீண்ட காலமாக வாசித்து பயன் பெற்று வருபவர்களில் ஒருவன். எனக்கும் கணிணி துறைக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் தங்களின் பதிவுகளின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டேன். நான் பொதுவாக பதிவுகளை வாசித்து பயன் பெறுவதோடு சரி அதிகமாக பின்னூட்டம் இட்டதில்லை (சுயநலத்திற்கு மன்னிக்கவும்) ஆனால் தங்களின் வலைப்பூவிற்கும், சொந்த மின்னஞ்சலுக்கும் நேர்ந்த இந்த எதிர்பாராத விஷயத்தை கேள்விப்பட நேர்ந்ததும் மனம் மிகவும் கவலையடைந்தது. ஆகவேதான் எனது மேலான ஆருதல்களை இந்த பின்னூட்டம் வாயிலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இழந்தவற்றை மீட்கும் முயற்சியில் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.

அன்போடும்... ஆதரவோடும்...
ரவி...

இளமுருகன் said...

உங்களால் பயனடைந்த பலர் இருக்கிறோம்.எங்கள் ஆதரவு என்றும் உண்டு.
அன்புடன்
இளமுருகன்
நைஜீரியா