Saturday, June 26, 2010

ஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி?

 
அலுவலகத்தில் எவ்வளவு நேரம்தான் கணினியின் முன்னால், சீரியஸாக வேலை செய்வது போல பாவ்லா காண்பித்துக் கொண்டிருக்க முடியும், என்று யோசிப்பவர்களுக்கு.. (இதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.. )

Double Vision - Online media browser எனும் எளிய மென்பொருள். தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. 

இதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கணினி அப்ளிகேஷனில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது, யூ டியுப் போன்ற தளங்களில் படம் பார்க்கவும், இணையத்தில் உலாவவும் முடியும், இது உங்கள் அப்ளிகேஷன் மீது transparent ஆக செயல் படுவதால் உங்கள் பணியும் நடந்தது போல இருக்கும், படம் பார்த்தது போலவும் இருக்கும். 


நீங்கள் பணி புரிந்துக் கொண்டிருக்கும் பொழுது (யூ டுயுபில் படம் பார்ப்பது) உங்கள் பாஸ் வந்து விட்டால் Ctrl+Esc அழுத்தி இதனை hide செய்து விடலாம். 

 
Background -இல் உங்கள் பணியும் நடந்துக் கொண்டிருக்கும். 


மேலும் இதன் settings பகுதிக்குச் சென்று  transparent அளவு மற்றும் mute போன்ற மாற்றங்களை செய்து கொள்ளலாம். 
ஆணி பிடுங்குறமாதிரி, பிடுங்காமல் இருக்க நினைக்கும் நண்பர்களுக்கு இந்த மென்பொருள் பயனுள்ளதாக இருக்கும். 




குறிப்பு:-
நிஜமாகவே ஆணி பிடுங்குபவர்களும் ஓட்டுப் போடலாம். 


.

10 comments:

கலகலப்ரியா said...

ம்க்கும்... நல்லா கொடுக்கறாங்கையா சொலூஷனு...

வானம்பாடிகள் said...

=)). அதெப்புடி பேக்ரவுண்டில் உங்கள் பணியும் நடக்கும். நெம்பத்தான் லொல்லாப் போச்சி:))

ஜெய்லானி said...

வல்லவனுக்கு வல்லவன் உலகத்தில உண்டுங்கிறது இதுக்குதான் போல..அட்டகாசம்..!!

சௌந்தர் said...

பாத்து அண்ணா உங்க அலுவலகத்தில் உள்ளவர்கள் இதை பயன் படுத்த போகிறார்கள்.எங்க அண்ணன் அலுவலகத்தில் youtube,orkut,இது போன்ற தளங்கள் தடை செய்யபட்டு உள்ளது

முனைவர்.இரா.குணசீலன் said...

இப்படியெல்லாம் கூட வழியிருக்கா??அருமையான பகிர்வு நண்பா இன்றுதான் இதனை அறிந்துகொண்டேன்..

கக்கு - மாணிக்கம் said...

அது சரி.......சூர்யா................பாஸுக்கும் இந்த சாப்ட் வார் பயன் பாடு அறிந்திருந்தால்?? சுவாரசியமாகவே உள்ளது.

Jey said...

எங்க கண்ணுக்கும் படுர மாதிரி போட்டுடீங்களே சார்.(என்ன எங்க ஆபீஸ்ல வேலை செய்ற பயபுள்ளக கண்ல இது படாம இருக்கணும்)ஆனியை நன்றாக பிடுங்குவது எப்படினு ஒரு பதிவை போடுங்களேன் சார்.ஹஹஹா

RajeshThirupathi said...

ஹா ஹா ஹா... நான் நிஜமாவே ஆணிதான் பிடுங்குறேன் . ட்ரை பண்ணுறேன் .நன்றி.

முத்து said...

ஆணியே புடுங்காம இருக்க எதாவது ஐடியா இருக்கா பாஸ்

steepan said...

super sir